நல்லவனுக்கும் வரும்,
தீயவனுக்கும் வரும்;

ஏழைக்கும் வரும்,
பிச்சைக்காரனுக்கும் வரும்;

லட்சாதிபதிக்கும் வரும்,
கோடீஸ்வரனுக்கும் வரும்;

படித்தவனுக்கும் வரும்
பாமரனுக்கும் வரும்;

பறவைக்கும் வரும்,
விலங்குக்கும் வரும்;

இதன் பார்வையில் எல்லா உயிர்களும் ஒன்றுதான்;

மனிதர்களைப் போல் இது
பேதம் பார்க்காது;

ஜாதி பார்க்காது;

மதம் பார்க்காது;

இனம் பார்க்காது;

வாழ்க்கை இவ்வளவு தான் என்று எடுத்துரைக்கும் பாடம் தான் ‘மரணம்’.

          -க.கங்காதரன்
ஆமணக்குநத்தம்
அருப்புக்கோட்டை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here