ண்ணீர்,பூலோகவாசிகளுக்கு கிடைத்த ‘அமுதம்’.”தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக் கூடாது” என்பார்கள்.அதனால்தான் நம் முன்னோர்கள் பஞ்சபூதங்களில் ஒன்றாக தண்ணீரை வைத்தார்கள்.தண்ணீரின் அருமையை அறிந்துதான் ‘நீரின்றி அமையாது உலகு’ என்று 2000 வருடங்களுக்கு முன்பே வள்ளுவர் கூறியிருக்கிறார்.

இன்று நாம் பயன்படுத்தும் ஒவ்வாரு துளி நீரும் 2 கோடி ஆண்டுகள் பழமையானது.
நம் முன்னோர்கள் தண்ணீரை கடவுளாக வழிபட்டனர்.’கங்கை,யமுனை,காவிரி‘ என்று நதிகளுக்கு பெயர்கள் வைத்தனர்.பெரிய நகரங்களின் நாகரிகங்கள் நதிக்கரை ஓரத்தில் தான் ஆரம்பித்தன.

மனித வாழ்க்கை தண்ணீரில் துவங்கி தண்ணீரிலே முடிகிறது.ஒரு குழந்தை பிறந்தவுடன் தண்ணீரைத் தொட்டுதான் வைக்கிறார்கள்,

அதே அவன் இறந்தவுடன் அஸ்தியை தண்ணீரில் கரைக்கின்றனர்.

விவசாயிகள் மழை வேண்டி,ஒரு தேங்காயை இரண்டாக வெட்டி இரண்டு துண்டுகளை வயல்களின் வரப்பில் வானத்தை நோக்கி வைப்பார்கள்.அதே மழை வேண்டாம் என்றால் தேங்காய் துண்டுகளை குப்புற வைப்பார்கள்.ஆனால் அவ்வாறு வைப்பது தவறு.

மழைத்துளி மண்ணில் பட்டதும் மண்வாசனை வருவது மண்ணிற்கும் மழைத்துளிக்கும் உள்ள தொடர்பாகும்.

தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்:-

மனித உடலானது 70 சதவீதம் நீரால் ஆனது.ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

தண்ணீர் குடிப்பதால் உடல் சூடு தணியும்,நோய் நொடிகள் வராது,குடலில் ஒட்டியிருக்கும் திடச்சத்துக்கள் நீரில் கலந்து ரத்தத்தில் சேரும்.

தண்ணீருக்கு செரிமான சக்தி உள்ளதால் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.

விஷத்தை முறிக்கும் சக்தி கூட தண்ணீருக்கு உண்டு.

ஆறுகள்,குளங்கள்,ஏரிகள் போன்ற நீர்நிலைகள் நிறைந்து கிடைந்த நம் தேசம்,இன்று தண்ணீருக்காக திண்டாடுகிறோம்.

குடிநீரை விலை கொடுத்து வாங்குகிறோம்.

இனி நம் சந்ததிகளுக்கு பணம்,சொத்துக்களை சேர்த்து வைப்பதைவிட தண்ணீரை சேர்த்து வைப்போம்.

நன்றி வணக்கம்.

-க.கங்காதரன்
ஆமணக்குநத்தம்
அருப்புக்கோட்டை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here