ர் அழகான குடும்பம்.அம்மா, அப்பா,மகன் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.மகனும் நல்லபடியாக படித்து வந்தான்.நிம்மதியாக வாழ்க்கை நகர்ந்தது.

ஒரு நாள்,குமரேசன் வெளியூருக்கு வேலைக்குச் சென்றார்.அங்கு சேரக் கூடாத சிலரிடம் சேர்ந்து மது அருந்தும் பழக்கம் வந்தது.சில நாட்கள் வீட்டிற்கு தெரியாமல் குடித்து வந்தார்.

ஒரு நாள் குடிப்பது மனைவிக்குத் தெரிந்தது.

மனைவி மீனாட்சி,அவரைப் பார்த்து.,

“என்னயா இது புதுப் பழக்கம்” என்று கேட்டார்.

அதற்கு,”வெளியூருக்கு வேலைக்குப் போனேன்ல அங்க பழகுனது.இந்த ஒரு தடவ மன்னிச்சிடு”.என்றார்.

“சரி,சரி போய்ட்டுப் போ” என்றார் மீனாட்சி.

மறுநாளும் குடித்தார்.மறுநாளும் மீனாட்சி கண்டித்தார்.

இப்படியே சில நாட்கள் சென்றன.குமரேசனுக்கு குடிப்பழக்கம் அதிகமானது.

குடும்பத்தில் மகிழ்ச்சி போய் சண்டை வந்தது.நன்றாக படித்த மகனும் குடும்ப பிரச்சினையால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனது.குடும்ப கஷ்டத்திற்கு படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்குச் சென்றான்.

ஒரு நாள்….

குமரேசன் வழக்கத்தை விட அதிகமாக குடித்து விட்டு வந்தார்.

அதைப்பார்த்த மீனாட்சி மிகவும் கோபமடைந்தார்.

“ஏதோ ஒரு நாளு போனா போகுதுனு விட்டா நீ இதே வேலையா செஞ்சிட்டு இருக்க,உன்னால நல்லா படிச்சிட்டு இருந்த பையனும் படிக்க போகாம வேலைக்குப் போறான்” என்றார் மீனாட்சி.

அதற்கு எதுவும் பேசாமல் போதையில் சிரித்துக் கொண்டிருந்தார் குமரேசன்.

“யோவ்,நா உன்கிட்டதா பேசிட்டு இருக்கேன்.நீ பாட்டுக்கு செக்கு மரம் மாதிரி நிக்குற” என்றாள்.

“என்ன நானும் போனா போகுதுனு வாய்க்கு வந்தபடி பேசுற?நா குடிக்கிறதே உன்னாலதாண்டி.

“நானா உன்ன குடினு ஊத்திக் கொடுத்தேன்?”.

“உங்க அப்பன் இருக்கானே அந்தக் கெழவன்,அவந்தான் உன்ன என்னோட கையில பிடிச்சுக் கொடுத்தான்,எனக்கு இஷ்டம் இல்லாமத்தா உன்ன கட்டிக்கிட்டேன்.கெழவன் உசுரோட இருந்தா என் கையாலயே கொன்னுருப்பேன்”.என்றார் குமரேசன்.

“அடப்பாவி மனுஷா….எதுக்குயா செத்துப்போன மனுஷன இழுக்குற? பேசுனா என்ன மட்டும் பேசு” ” என்றார் மீனாட்சி.

“அப்படித்தான்டி பேசுவேன்,என்ன பண்ணுவ?” என்றார்.

அதை சுற்றி இருந்தவர்கள் பார்த்து,

“அடப்பாவமே எப்படி இருந்த குடும்பம் எப்படி ஆயிடுச்சுனு பாரு” என்றனர்.

இந்த சண்டையினால் அவர்களது மகன் மிகவும் மனமுடைந்து போனான்.

மறுநாள் காலை.,

மீனாட்சி மகனை எழுப்பினார்.ஆனால் அவன் எழுந்திருக்கவில்லை.அவன் கையில் பார்த்து அதிர்ந்து போனார்.அவன் கையில் மணிக்கட்டில் ரத்தமாக இருந்தது.அவன் அருகில் ஒரு காகிதம் இருந்தது.அதில்., “அம்மா என்னை மன்னிச்சிடு.நாளைக்கு நீ என்னை எழுப்பும் போது உசுரோட இருக்கமாட்டேன்.நானும் அப்பா இன்னிக்கு திருந்திடுவாரு நாளைக்கு திருந்திடுவாருனு நெனச்சேன்.ஆனா திருந்துற மாதிரி இல்ல.அதனாலதான் நான் சாகலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்று எழுதி இருந்தது.

மகனின் இறப்பைப் பார்த்து மீனாட்சி கதறி அழுதார்.அதைப் பார்த்து குமரேசன் வந்தார்.அவரைப் பார்த்து.,

“யோவ் பாருயா ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு வளர்த்த பிள்ளய பாருயா….இப்ப உனக்கு சந்தோஷம் தான?போயா போ…..போய் இந்த சந்தோஷமா குடிச்சு கும்மாளம் போடு…”என்றார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

மகனைப் பார்த்து கதறி அழுதார்.மனைவியைப் பார்த்து.,

“என்ன மன்னிச்சிடு….” என்றார் குமரேசன்.

“போயா என் கண்ணு முன்னால நிக்காத போயிரு…..” என்றார்.

குமரேசன் போகாமல் அங்கேயே நின்றார்.

“இந்தாள போகச் சொல்லிடுங்க” என்றார் பக்கத்து வீட்டு பெண்மணியிடம்.

பின் மயக்கம் போட்டு விழுந்து மீனாட்சியும் இறந்துபோனார்.கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல், மனைவியையும், மகனையும் ஒன்றாக பறிகொடுத்த பின் திருந்தினார்….ஆனால் பயனில்லை….

(இது வெறும் கதைதான். ஆனால் உண்மையில் சில குடும்பத்தில் இது போன்று நடக்கிறது.பல தாய்மார்களின் கண்ணீருக்கு குடிதான் காரணம்.குடிப்பவர்கள் குடிப்பதற்கு முன் தன் குடும்பத்தை நினைத்துப் பார்த்தால் பல குடும்பங்கள் நிம்மதியாக இருக்கும்.)

நன்றி வணக்கம்.

–க.கங்காதரன்
ஆமணக்குநத்தம்
அருப்புக்கோட்டை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here