கிப்தின் வரலாறானது 6000 வருடங்களுக்கு முன்பு இருந்தே தொடங்குகிறது.இதன் வரலாறு மட்டும் இல்லை மர்மங்களும் நீண்டது.

துட்டுங்காமுன்:-

        * எகிப்தை ஆண்ட பாரோ வம்ச அரசர்களில் முக்கியமானவர், ‘துட்டுங்காமுன்’. இவர் தந்தை பெயர் ‘அகென்டென்’.

       * கி.மு.1341ல் பிறந்தார்.
கி.மு.1332ல் அவரது தந்தை இறந்தபின் 9 வது வயதில் அரசனானார்.

      * 9 ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தார்.18 வது வயதில் மரணமடைந்தார்.

        * அவர் மரணமடைந்த ஆண்டு கி.மு.1323.

      * 3245 ஆண்டுகளுக்கு பிறகு,அதாவது கி.பி.1922ல் ‘ஹாவர்ட் கார்டர்’ என்ற தொல்லியல் ஆய்வாளரால் துட்டுங்காமுன் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

        * ஆனால், அவரின் இறப்பின் மர்மம் இன்றும் விடை காண முடியாத விடயமாக உள்ளது.

    * அவர்,மலேரியா காய்ச்சல் காரணமாக இறந்திருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

      * ஆனால்,அவரது தாய் தந்தை இருவரும்,சகோதர சகோதரிகளாக இருந்ததால் ஒரு வகையான நோயினால் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பிரமிடுகள்:-

      * பிரமிடுகள் பற்றி ஏற்கனவே பார்த்தது தான்.பிரமிடுகள் எகிப்தில் 4000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.

      * இதனைக் கட்ட 20 வருடங்கள் எடுத்துக்கொண்டனர்.

      * கீஷா என்ற பிரமிடு தான் மிக உயரமானது.

      * இதன் உயரம் 137 அடி.

      * எவ்வித தொழில்நுட்பம் இல்லாத அந்தக் காலத்தில் எவ்வாறு கட்டமைத்து இருப்பார்கள் என்று இன்றளவும் விஞ்ஞானிகளை குழப்பி வருகிறது.

    * சாதாரணமான மனிதர்களால் கட்டியிருக்க வாய்ப்பில்லை.

       * எனவே வேற்றுகிரக வாசிகளால் கட்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

      * 1922ல் தோண்டியெடுக்கப்பட்ட துட்டுங்காமுன் கல்லறையில் விண்கல்லால் ஆன வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

      * அதனால் வேற்றுகிரக வாசிகளுக்கும்,அக்கால எகிப்தியர்களுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மம்மி:-

        * அக்கால எகிப்தில் உடல்களை பதப்படுத்தி பிரமிடுகளுக்குள் புதைத்தனர்.

       * இதற்கு ‘மம்மிஃபிகேஷன்’ என்று பெயர்.

      * இறந்தவர்களை புதைக்கும் போது அவர்கள் பயன்படுத்திய உடைகள்,நகைகள் போன்றவற்றை அவர்களுடன் வைத்து புதைத்து விடுவர்.

        * இவ்வாறு செய்வதால் மறுபிறவி எடுப்பதாக நம்பினர்.

பதப்படுத்தும் முறை:-

        * இறந்தவர்களின் உடலை முதலில் நைல் நதி நீரால் சுத்தம் செய்வார்கள்.

       * பின் பார்லி எண்ணெய் போன்றவற்றால் கழுவுவார்கள்.

        * பின் நாசி துளை வழியாக மூளையை எடுத்து விடுவார்கள்.

      * இரண்டு வாரங்கள் உடலை சுடுமணலில் காயவைப்பார்கள்.

       * பின் உடலின் ஈரப்பதம் குறைந்தவுடன் உடல் முழுவதும் துணியால் சுற்றுவார்கள்.

       * பின் உடலை புதைப்பார்கள்.

       * மனிதர்களுக்கு மட்டுமல்ல பூனை,நாய் போன்ற விலங்குகளுக்கும் இதே முறையை கையாண்டனர்.

       – க.கங்காதரன்
ஆமணக்குநத்தம்
அருப்புக்கோட்டை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here