ன் முட்டையை அடைகாக்க,
அடுத்த தாயை
அடைக்கலம் தேடும்,
குயிலின் குரலில்
எத்தகைய சோகம்
உள்ளடங்கியதென
யாரறிவார்!

தீப்பந்தத்துக்குப் பயந்து
தன் வாழ்நாளின் சேமிப்பையே
விட்டுப் பறக்கும்
தேனீயின் வாழ்க்கை
எத்தனை கசப்பானதென்று
யாரறிவார்!

பட்டாடையை உருவாக்க
தன் உயிரையே
பணயமாக வைக்கும்
பட்டுப்புழுவின் வாழ்க்கை
எத்துனை மங்கியதென
யாரறிவார்!

வலிமையான புற்றை
கட்டி முடித்து,பாம்புக்குத்
தாரை வார்க்கும்
கரையானின் வாழ்க்கை
எத்தகைய பலகீனமானதென
யாரறிவார்!

எவரேனும் அறிய நேர்ந்தால்
தன்னம்பிக்கை இல்லாதவரிடம்
கூறுங்கள்,
மனிதனின் வாழ்க்கை…
அவ்வளவொன்றும்
வலி நிரம்பியதல்லவென்று…!!!

                      -க.கங்காதரன்
ஆமணக்குநத்தம்
அருப்புக்கோட்டை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here