அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது;

அதனினும் அரிது,
மாதரசியாய் பிறப்பெடுப்பது;

தெய்வத்தின் மறு உருவம்
‘பெண்’ தான்;

வீடென்னும் கோவிலில் வீற்றிருப்பாள்,

பாடென்றும் பட்டாலும்,
பாசத்தில் குறைவில்லை;

கணவனுக்காக கூற்றுவனையே எதிர்த்தவள்,

தன்னைத் தூற்றுபவனை ஒரு பொருட்டென மதிப்பாளோ!;

பெண் ஒரு பெரும் சக்தி,

கோபத்தில் அவள் பராசக்தி;

பெண்ணால் வந்த சமுதாயம், பெண்ணைப் பழிக்கலாமா?;

ஆண் வெற்றியின் பின்புலம் பெண் தான்;

ஆணின் கஷ்டத்தை பெண் அறிவாள்,

பெண்ணின் கஷ்டத்தை யார் அறிவார்?;

தண்ணீரில் அழுத மீனின் நிலைதான் அவளின் நிலை;

பெண்ணின்றி அமையாது உலகம்;

அவளின்றி அசையாது எதுவும்.

                 – க.கங்காதரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here