ஜான் நிக்கோலஸ் மற்றும் அவரது மனைவி மேரி மடோனா இருவரும் ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரில் இருந்து பெர்லின் நகருக்கு குடிபெயர்கின்றனர்.இருவருக்கும் குழந்தைகள் இல்லை.அதனால் நிக்கோலஸ் அவர் மனைவி மீது அதிக அன்பு வைத்திருந்தார்.மேரி தினமும் தனது அன்றாட நிகழ்வுகளை தனது டைரியில் எழுதி வைப்பார்.அன்றும் தங்களது புது வீட்டிற்கு வந்ததை டைரியில் குறித்து வைத்தார்.அன்று இரவு இருவரும் உறங்கிக்கொண்டிருக்கும் போது வினோத சத்தங்களும், குதிரை வண்டியின் சத்தமும் மேரிக்கு கேட்கிறது.சத்தம் கேட்டதும் மேரி கண் விழித்து எழுந்து உட்கார்ந்தார்.நிக்கோலஸ் நன்கு உறங்கிக்கொண்டிருந்தார்.அவரை எழுப்ப மனமில்லாமல் மேரி மறுபடியும் படுத்து உறங்கினார்.சிறிது நேரம் கழித்து மறுபடியும் அதே சத்தம் கேட்கிறது. மறுபடியும் எழுந்து உட்கார்ந்தார். ஜாடியில் இருந்த தண்ணீரைக் குடித்தார்.லேசாக பயம் வரத் தொடங்கியது.பயத்தைப் போக்க ஜெபம் செய்தார்.பின் படுத்து உறங்கிவிட்டார்.

மறுநாள் காலை இதைப் பற்றி நிக்கோலஸிடம் கூறினார்.அதற்கு அவர்,

    “நீ ஏதாவது கனவு கண்டிருப்ப” என்றார்.

    மறுநாள்,அதாவது காலை 11 மணிக்கு ஒரு தந்தி அவர்கள் வீட்டிற்கு வருகிறது.அதில் “நீங்கள் இந்த வீட்டில் இருக்காதீர்கள், இருந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து” என்று எழுதி இருந்தது.அதில் அனுப்பப்பட்ட முகவரி இல்லை. அதைப் படித்த மேரி அதிர்ச்சி அடைந்தார்.உடனே நிக்கோலஸிடம் தெரிவித்தார்.

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு.இந்த வீட்டுல ஏதோ இருக்கு.அன்னைக்கு எனக்கு கேட்ட சத்தம்,இப்போ இந்த தந்தி இந்த வீட்டுல இருக்க வேணாம் நம்ம பழைய வீட்டுக்கே போயிடலாம்” என்றார்.

“இது யாரோ நம்மை பயமுறுத்த எழுதி இருப்பாங்க.நீ ஒண்ணும் பயப்படாத நா இருக்கேன்” என்று சமாதானப்படுத்தினார்.

அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்து,மேரி சமையல் அறையில் இருக்கும் போது ஓர் உருவம் வெளியே நடந்து செல்வதைப் பார்த்தார்.வெளியே சென்று பார்த்த போது யாரும் இல்லை.மறுபடியும் உள்ளே சென்றார்.உள்ளே இருந்த கண்ணாடியில் ஒரு முகம் தோன்றியது.அந்த உருவம் பார்ப்பதற்கு வேற்றுகிரக வாசி போன்று விசித்திரமாக தெரிந்தது.அதைப் பார்த்து மேரி பயந்து மயக்கமடைந்தார்.

மறுநாள் அவர்களின் பக்கத்து வீட்டுப் பெண் மேரியிடம்,

  “இந்த வீட்டுல இருக்காதீங்க” என்றாள்.

“ஏன்?” என்று கேட்டார் மேரி.

“நாலு நாளுக்கு முன்னாடி ஒரு உருவம் உங்க வீட்டுக்கு பக்கத்துல நின்னது.அத பாக்குறதுக்கு ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு” என்றாள்.

அதைக்கேட்டதும் மேரி அதிர்ச்சி அடைந்தார்.கணவர் நிக்கோலஸ் வந்ததும் இதனைக் கூறினார்.அதற்கு,

“ஆமா,நீ சொல்றது உண்மைதான்.இந்த வீட்டுக்கு வந்த முதல் நாள் ராத்திரி உனக்கு கேட்ட அதே சத்தம் எனக்கும் கேட்டுச்சு” என்றார்.

“ஒரு வேளை பேய்,பிசாசு ஏதாவது இருக்குமா?” என்று கேட்டார்.

“இல்ல இது பேயோ பிசாசோ இல்ல” என்றார் நிக்கோலஸ்.

“எப்படி சொல்றீங்க?” என்று மேரி கேட்டார்.

“இந்த வீட்டுக்கு வந்த ரெண்டாவது நாள் ஒரு தந்தி வந்துச்சு ஞாபகம் இருக்கா?அதக் கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷன்ல கொடுத்தேன்.அவங்க அதுல ஃப்ரம் அட்ரஸ் இல்லாததுனால அத யாரு அனுப்புனதுனு கண்டுபிடிக்க முடியல.ஆனா அத சைபர் கிரைம்ல கொடுத்ததுல அந்த தந்தியில இருந்த எழுத்து மனுஷங்க எழுதுனது இல்லனு சொன்னாங்க” என்றார்.

“என்ன சொல்றீங்க?” என்று கேட்டார் மேரி.

“ஆமா,அத எழுதுனவன் ‘ப்ளாக் மேஜிக்’ கத்துக்கிட்டவன் தான் எழுதி இருக்கான்” என்றார்.

“நீங்க சொல்றது ஒண்ணும் புரியலயே” என்றார் மேரி.

“இன்னைக்கு எல்லாம் புரியும்” என்றார்.

அன்று இரவு வீட்டுக்கு பாதிரியார் வந்தார்.வீட்டில் சில சடங்குகள் செய்தார்.அப்போது அவர்கள் பார்த்த அந்த உருவம் அவர்கள் முன் வந்தது.பின் அந்த உருவம் மனித உருவில் மாறியது.அவனிடம் ‘யார் நீ?’ என்று கேட்டனர்.

அதற்கு அவன் “நான் மாய மந்திரங்கள் மேலயும் ப்ளாக் மேஜிக்,அப்படிங்கிற கருப்பு மந்திரத்தின் மேலயும்,சூன்யம் மேலயும் விருப்பம் கொண்டவன்.நா நினைச்ச மந்திர சக்தி வந்திடுச்சு.அதனால நா என்னோட மந்திர சக்திய பயன்படுத்த ஒரு தனிமையான இடம் தேவப்பட்டது.அதனால இந்த வீடு கிடைச்சது.ஆனா நீங்க இந்த வீட்டுக்கு வந்ததால எனக்கு இடைஞ்சலா இருந்துச்சு.அதனால தான் உங்கள இந்த வீட்டுல இருந்து துரத்ததான் உங்கள பயமுறுத்தினேன்.அந்த தந்தியும் அனுப்புனேன்” என்றான்.

பின்,அவனை கைது செய்தனர்.பின் அந்த வீட்டில் நிம்மதியாக வாழ்ந்தனர்.

                  -க.கங்காதரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here