தரிசு நிலத்தையும், பரிசு நிலம் ஆக்குவான்;

புல்லையும், நெல் ஆக்குவான்;

கருங்கல்லையும், வைரக்கல் ஆக்குவான்;

வெறும் மண்ணையும், பொன் ஆக்குவான்;

வியர்வையையும், பன்னீர் ஆக்குவான்;

தன் உடலையும், உயிரையும் பயிருக்கு உரமாக்குவான்;

பிறர் வயிற்றை நிரப்ப, தன் வயிற்றை பட்டினி போடுவான்;

உலகின் பசியைப் போக்கி, படி அளிக்கும் கடவுள் ‘விவசாயி’ தான்.

          –கங்காதரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here