முதியவர் ஒருவர், வெளியூர் செல்வதற்கு பேருந்தில் சென்றார்.அவர் அருகில் ஒரு இளைஞன் அமர்ந்து புகை பிடித்தான்.அவனைப் பார்த்து.,

முதியவர்: தம்பி….!

இளைஞன்: என்ன?

என்று திமிராக கேட்டான்.

முதியவர்: பஸ்க்குள்ள சிகரெட் பிடிக்கலாமா?

இளைஞன்: பெருசு….
இது என்னோட சிகரெட்,என்னோட வாய்.நா சிகரெட் பிடிச்சா உனக்கென்ன?

முதியவர்: ஆனா இது பொது இடம்ப்பா! பொது இடத்துல தப்பு பண்ணா யாரு வேணாலும் கேட்கலாம். இதே நீ வெளியில, இல்ல உன்னோட வீட்டுல வச்சு குடிச்சா யாரும் கேட்க மாட்டாங்க.ஆனா இங்க குழந்தைங்கல்லாம் இருக்காங்க.புகை பிடிச்சா,அவங்கள விட பக்கத்துல இருக்குறவங்களத்தான் பாதிக்கும்னு தெரியாதா?

இளைஞன் அமைதியாக இருந்தான்.

முதியவர்: இதை ஏன் சொல்றேன்னா,என்னோட மகனும் சிகரெட் பிடிச்சதுனாலதான் இன்னிக்கு கேன்சர் வந்து ஆஸ்பத்திரியில கெடக்கான்.எவ்வளவு சொல்லியும் கேட்கல.
தாயில்லா ரெண்டு குழந்தைங்கள விட்டுட்டு சாகப்போறான்.வாழ வேண்டிய வயசுல வீணா போய்ட்டான்.உன்ன மாதிரி வயசு பசங்களுக்கு அறிவுரை சொன்னா பிடிக்காது.சொன்னா கோபம்தான் வரும்.உன்ன என்னோட மகனா நெனச்சி சொல்றேன்.இனிமே சிகரெட் பிடிக்காத.

என்று கண் கலங்கினார்.

அதைக்கேட்டு இளைஞன் தன்னை மறந்து கண் கலங்கி உட்கார்ந்திருந்தான்.சிகரெட்டின் கங்கு விரலில் சுட்டு பட்டென துள்ளி விழுந்தான். பின் சிகரெட்டை கீழே விட்டான்.

இளைஞன்: ஐயா….என்ன மன்னிச்சிடுங்க.
ஒவ்வாரு மனுஷனோட வாழ்க்கையிலும் சோகம் இருக்கும்னு இப்போத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.இனிமே இந்த சிகரெட்ட தொடவே மாட்டேன். அன்றிலிருந்து அந்த இளைஞன், புகை பிடிப்பதை நிறுத்தி விட்டான்.

                   –கங்காதரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here