வ்வுலகில் மர்மங்களுக்கு பஞ்சமே இல்லை.தோண்டத் தோண்ட கிடைக்கும் புதையலைப் போல்,மர்மங்கள் நீண்டு கொண்டே இருக்கின்றன.அடுத்து நாம் காண இருக்கும் மர்மமும் புதையலைப் பற்றித்தான்.

புதையல்:-

      * புதையல்கள் பூமியில் பல வருடங்களுக்கு முன்பு மனிதர்களாலும்,இயற்கை சீற்றங்களாலும் புதையுண்ட பொருட்கள் ஆகும்.அவை தங்கம்,வெள்ளி,வைரமாக இருக்கலாம்.அல்லது நாணயங்களாக இருக்கலாம்.அல்லது வேறு எந்தப் பொருளாகவும் இருக்கலாம்.அப்படிப்பட்ட சில புதையல்களைப் பார்ப்போம்.

1. ஓக் தீவு:-

      * இத்தீவு கனடாவில் உள்ளது.’ஓக் மரங்கள்’ அதிகம் இருந்ததால் அப்பெயர் வந்தது.

      * கி.பி.1795 ம் ஆண்டு,
முதல் முறையாக இத்தீவில் புதையலைத் தேட ஆரம்பித்தனர்.

      * மரங்கள் வெட்டப்பட்டு
குழி போன்ற ஒரு அமைப்பு தென்பட்டதால்,அங்கு புதையல் இருக்கும் என நம்பி தோண்ட ஆரம்பித்தனர்.

      * அதற்கு பிறகு,பல ஆண்டுகளாக புதையலைத் தேடினர்.ஆனால்,புதையல் கிடைக்கவில்லை.

     * 1868 ம் ஆண்டு தோண்டியபோது,வித்தியாசமான குறியீடுகளுடன் பலகையைக் கண்டறிந்தனர். அதனால்,அங்கே நிச்சயம் புதையல் இருக்கும் என நம்பினர்.அதனால் மேற்கொண்டு தோண்ட ஆரம்பித்தனர்.

     * பல ஆண்டுகளுக்குப்பிறகு,1939 ம் ஆண்டு,170 அடிக்கும் மேல் துளையிட்டுச் சென்றனர்.அப்போது 17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாணயங்களும், ரத்தினக் கல்லும் கிடைத்ததால்,புதையலைத் தேடுபவர்களின் ஆர்வத்தை அதிகரித்தது.

    * அந்தத் தீவில் புதையல் இருப்பதாக நம்பப்படுவதற்கு காரணம், கடற்கொள்ளையர்களின் ஆதிக்கம் நிறைந்த காலப்பகுதி 17 ம் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது.அவர்கள் தாங்கள் கொள்ளையடித்த பொருட்களை அங்குதான் புதைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

      * இப்புதையல் சபிக்கப்பட்டது எனவும்,அது சாத்தானுக்கும் அதை புதைத்தவருக்கும் மட்டுமே தெரியும் எனவும் கூறுகின்றனர்.

      * மேலும்,அங்கு 7 உயிர்களை பழி கொடுத்தால் தான் புதையல் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

      * ஆனால் இது உண்மையா? இல்லையா? அங்கே புதையல் உள்ளதா? இல்லையா? என்று 200 வருடங்களுக்கு மேலாகியும் இன்றும் ஒரு பெரிய மர்மமாகவே உள்ளது.

2. ஜெய்ஹார் கோட்டை:-

      * ராஜஸ்தான் மாநிலம்,ஜெய்ப்பூரில் உள்ளது இக்கோட்டை.

      * முகலாய மன்னர் அக்பரின் தளபதி ‘ஜெய்சிங்’ என்பவரால் கட்டப்பட்டது தான் ‘ஜெய்ஹார் கோட்டை’.

      * ஆப்கான்களின் படையெடுப்புகளில் இருந்து கைப்பற்றப்பட்ட புதையல்களை அந்தக் கோட்டையில் தான் மறைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

      * ஆனால்,இந்தப் புதையலுக்கான ரகசியமும் மர்மமாகவே உள்ளது.

3. பத்மநாப சுவாமி கோயில்:-

      * கேரள தலைநகரம், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் 2011 ம் ஆண்டு அக்கோவிலின் ரகசிய அறைகள் திறக்கப்பட்டன.

      * மொத்தம் உள்ள 6 அறைகளில் 5 அறைகளின் கதவுகளையும் திறந்தனர்.அதில் ஏராளமான தங்கம்,வைரம் போன்ற ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டன.

      * ஆனால் ஒரே ஒரு அறையின் கதவு மட்டும் திறக்கப்படவில்லை.

      * அந்த அறையில் ஏராளமான புதையல்கள் மட்டுமல்ல, மர்மங்களும் புதைந்து இருப்பதாக நம்பப்படுகிறது.

      * மேலும் இந்த புதையலை நாகங்கள் காவல் காப்பதாக பல காலங்களாகவும் கூறப்படுகிறது . இந்த அறையைத் திறந்தால், உலகம் அழியும் எனவும் கூறுகின்றனர்.

4. கிருஷ்ணா நதி:-

      * இந்நதியானது, மஹாராஷ்டிரம்,கர்நாடகம்,ஆந்திரப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் பாய்கிறது.

      * புகழ்பெற்ற ‘கோகினூர் வைரம்’ இந்த நதிக்கரையில் கண்டெக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

      * உலகில் சிறந்த பத்து வைரங்களில் 7 வைரங்களை இந்த ஆற்றங்கரையில் தான் எடுத்தனர் என கூறுகின்றனர்.

      * இன்னும் பல புதையல்கள் ‘கிருஷ்ணா நதிக்கரையில்’ புதைந்திருப்பதாக நம்பப்படுகிறது.

கடல்:-

      * ‘கடல்’ அழகான  தோன்றம் கொண்டது.அதனால் இது எல்லாருக்கும் பிடித்த ஒன்று.அழகு இருந்தால் ஆபத்தும்,மர்மங்களும் இருப்பது இயற்கையே.

      * செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பிய விஞ்ஞானிகளால்,கடல்களைப் பற்றி முழுமையாக ஆராய்ச்சி செய்ய இயலவில்லை.

1. மரியானா அகழி:-

        * இது பசுபிக் பெருங்கடலில் உள்ளது.

        * கடல் நடுவே வட்டமாக காட்சியளிக்கும் இதன் ஆழம் எவரெஸ்ட் சிகரத்தையே மூழ்கடித்து விடும் என்கின்றனர்.

      * இதன் உண்மையான ஆழத்தை இன்று வரை கணக்கிட இயலவில்லை.

        * நவீன சாதனங்களைப் பயன்படுத்தியும் இதன் அடிவரை  செல்ல இயலவில்லை.

        * இதனுள் 8 டன்கள் வரை அழுத்தம் இருக்கும் என விஞ்ஞானிகள்  கூறுகின்றனர்.

          * இந்த அகழி எவ்வாறு உருவானது?இதன் ஆழம் எவ்வளவு? என்று இன்று வரை விடை தெரியவில்லை.

2. கடல் கன்னிகள்:-

       * இடுப்புக்கு மேல் மனித உடலையும்,இடுப்புக்குக் கீழ் மீனின் அமைப்பையும் கொண்டவை தான் ‘கடல் கன்னிகள்’.

         * கடந்த 3000 ஆண்டுகளாக, இந்த கடல் கன்னிகளைப் பற்றிய உண்மைகளைத் தேடி வருகின்றனர்.

         * பண்டைய ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக கடல் கன்னிகளைப் பற்றிய பேச்சு எழுந்தது.

           * பல வருடங்களாக கடல் கன்னிகளை நேரில் பார்த்ததாக பலரும் தெரிவித்துள்ளனர்.

          * 1493ம் ஆண்டு, கிரிஸ்டோபர் கொலம்பஸ் கடல் கன்னியை பார்த்ததாக கூறியிருந்தார்.

         * 1608 ம் ஆண்டு,தாமஸ் கில்ஸ் மற்றும் ராபர்ட் ஆகிய இருவரும் ஹட்சன் நதிக்கரையில் கடற்கன்னியை பார்த்ததாக குறிப்பு உள்ளது.

         * 1737 ம் ஆண்டு,ஸ்பெயின் கடற்கரையில் மீனவர்கள் கடல் கன்னியை பார்த்திருந்தனர் என்று கூறப்படுகிறது.

    * இன்று வரை கடல் கன்னியை பற்றிய மர்மம் விலகாமலே உள்ளது.

     * நாமும் நிறைய கடற்கரைக்குச் சென்றிருக்கிறோம்,
அங்கே குளித்திருக்கிறோம், விளையாடி இருக்கிறோம்.

      * ஆனால், நம்மில் யாரும் கடல் கன்னியை பார்த்ததில்லை என்பதே உண்மை.

3. கடல் புதையல்கள்:-

     * பூமியில் நிலத்தில் புதைந்திருப்பதைப் போலவே, கடலிலும் சில புதையல்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

     * 1987 ம் ஆண்டு ஜப்பானில் கடலுக்கடியில் ‘பிரமிடுகள்’ போன்ற ஒன்றைக் கண்டுபிடித்தனர்.அதில் ஏராளமான படிக்கட்டுகள் இருந்தன.

      * இது 10000 வருடங்களுக்கு முன்பு இயற்கையாகவே உருவானது என்று அனுமானித்தனர்.

      * ஏனெனில்,அப்போது வாழ்ந்தவர்களால் எவ்வாறு இவ்வளவு படிக்கட்டுக்களை கட்டியிருக்க முடியும்?

      * இதுவும் ‘பிரமிடுகள்’ போன்றே கட்டப்பட்ட மர்மம் விலகாமலே உள்ளது.

      * இயற்கயாக உருவாகியிருந்தாலும்,மனிதனால் கட்டப்பட்டாலும் எப்படி கடலுக்குள் வந்தது என்று விஞ்ஞானிகளே குழம்பியிருந்தனர்.

      * குஜராத்தில் இருந்து சிறிது தூரத்தில்,கடலில் ஒரு நகரம் மூழ்கியிருந்ததை கண்டறிந்தனர்.

      * இந்நகரம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கி இருக்கும் என்கின்றனர்.

      * ஹரப்பா,மொகஞ்சதாரோ நாகரிகத்துடன் இந்த நகரம் தொடர்பு வைத்திருந்து என ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

      * இயற்கைச் சீற்றங்களினால் இந்நகரம் அழிந்திருக்கக் கூடும் என்கின்றனர்.

      * தமிழகத்திற்கு சொந்தமான ‘குமரிக்கண்டம்’ பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

      * இந்தக் கண்டம் 20000 ஆண்டுகளுக்கு முன்பே கடலில் மூழ்கி விட்டதாக சங்க இலக்கியங்களில் குறிப்புகள் இருந்தன.

       * அதனால் இந்தக் கண்டமானது உண்மையில் உள்ளதா? இல்லையா?என்று இன்றளவும் இந்தியப் பெருங்கடலில் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

       * கடலுக்கடியில் கற்களும்,கட்டிடங்களும் மட்டும் அல்லாமல் தங்கமும் இருப்பதாக கூறுகின்றனர்.

       * அங்கு,18 மெட்ரிக் டன் தங்கக்கற்கள் புதைந்திருப்பதாக கூறியிருக்கின்றனர்.

      * நியூசிலாந்து கடற்கரையில்,கடற் பொருட்களால் இயற்கையாக உருவான பெரிய பந்து போன்ற அமைப்பு கொண்ட கற்கள் நிறைய காணப்படுகின்றன.

      * இவை பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே உருவானதாக கணித்துள்ளனர்.

      * வேறு எந்த கடற்கரையிலும் இல்லாத அந்தக் கற்கள் அங்கே மட்டும் எப்படி உருவானது?என விஞ்ஞானிகளுக்கு புதிராக உள்ளது.

        மர்மங்கள் தொடரும்……

                         –கங்காதரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here