மர்மம்-5

மர்மங்கள் இவ்வுலகம் இருக்கும் வரை விலகாது.அடுத்து பார்க்க இருக்கும் மர்மம்.,

வரலாறு:-

        * ‘வரலாறு முக்கியம் அமைச்சரே’ என்பது போல் வரலாறு என்பது ஒவ்வாரு நாட்டிற்கும் அவசியமான ஒன்று.

        * ஆனால், வரலாறு முழுவதும் உண்மையாக இருக்கும் என்பது சந்தேகம்தான்….

        * ஏனென்றால், வரலாற்று ஆசிரியர்கள் ஒவ்வாருவரும் வரலாற்றை வெவ்வேறு விதமாக கூறுவர்.

          * உதாரணமாக,கி.பி.3ம் நூற்றாண்டு முதல் கி.பி.6ம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவை ஆண்ட ‘களப்பிரர்கள்’ குறித்து இன்று வரை விடை தெரியாமலே உள்ளது.

        * அவர்கள் யார்?, எங்கிருந்து வந்தனர்? மூன்று நூற்றாண்டுகள் தென்னிந்தியாவில் என்ன செய்தார்கள்?என்று இன்றும் ஒரு மர்மமாகவே உள்ளது.அதனால் ‘களப்பிரர்கள்’ காலத்தை இருண்ட காலம் என்று கூறுகின்றனர்.

          * இந்தியாவை ஆண்ட அரசர்களில் முக்கியமானவர் ‘பேரரசர் அசோகர்’.

        * அவரது இளமைக் காலம் குறித்தும்,அரியணை ஏறியது பற்றியும் முழுமையான தகவல் கிடைக்கவில்லை.

        * அசோகரின் தந்தை,பிந்துசாரர் இறப்பிற்கும்(கி.மு.273),அசோகர் பதவி ஏற்றதற்கும்(கி.மு.269) இடையே 4 ஆண்டுகள் என்ன நடந்தது என வரலாற்று அறிஞர்கள் பலரும் பல கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

        * அந்த 4 ஆண்டுகள் என்ன நடந்ததிருக்கும்? என்று மர்ம முடிச்சாகவே உள்ளது.

        * இதே போன்று, வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளவை ஏராளம் உள்ளன.

பாதாளம்:-

       * பாதாளம் என்பது, பூமிக்கடியில் இருக்கும் இன்னொரு உலகம்  என்கின்றனர்.

      * பாதாள உலகில் அரக்கர்கள் வாழ்கின்றதாகவும்,நாகர்கள் வாழும் பகுதி ‘நாகலோகம்’ என்று கூறப்படுகிறது.

      * திபெத்தில் ஒரு பாதாள நகரம் இன்னும் இருப்பதாக கூறப்படுகிறது.

        * 1950 களில் அண்டார்டிகாவில் நடத்தப்பட்ட ஆய்வில்,ஒரு பாதாள அறையைப் போன்ற ஒன்றைக் கண்டதாக ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். அந்த பாதாளத்தின் வழியாக வேற்றுகிரக வாசிகள் வந்ததாக கூறுகின்றனர்.

        * பாதாளங்களில் தெய்வ சக்தி இருப்பதாகவும்,தீய சக்திகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

        * ஆனால்,பாதாள உலகம் இருப்பதாக புராணங்களிலும், கற்பனைக் கதைகளிலும் தான் கூறியிருக்கின்றனர்.

      * உண்மையில் பாதாள உலகம் இருப்பதாக இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

                           — கங்காதரன்.
                     ஆமணக்குநத்தம்,
                    அருப்புக்கோட்டை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here