பள்ளிக்கூட நட்பு

நடந்து செல்லும்
மலர்கள்
இரண்டும்

மழலை குரலில்
தேன் வடிக்க

அதை சிந்தாமல்அள்ளிப்பருகும்
செவிகளுக்கும் மோட்சம்

மண்ணில் இறங்கி
நிலவும் சூரியனுமாய்
அவதாரமாகி
கைகோர்த்து தரும்
வெளிச்சத்தில்

நட்பெனும் பாடலில்
நாவும் நடனமாட
தெவிட்டுத்தான் போகுமா

கள்ளம் கபடமற்ற நட்பு
கசந்துதான் போகுமா

அன்னையில்லா உறவில்
கூட நட்பு இல்லா உறவுகள்
இல்லை

ஆயிர பூக்கள்
பள்ளிதோட்டத்தில்
பூத்தாலும்
அனைத்தும் நட்பாகிடுவதில்லை

உண்மைகளும்
உரிமைகளும்
உன்னதமாய்
உறவாடும் இடம்
பிஞ்சு இதயங்களின்
நஞ்சு இல்லா நட்பில்…..

அரும்புகள் மலர
குறும்புகள் வளர

நட்புகள் செழிக்க…….
யாரால் தான் முடியும் அந்த உன்னதத்தை அழிக்க…..

நட்புடன்….
M.ஜோ

Tiruppurmediaworks

Photography – jothimalar

Editor – krishna

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here