கனவு:-

* ‘கனவு காணுங்கள்’ என்று அப்துல் கலாம் கூறியுள்ளார்.ஆனால் அவர் சொன்ன கனவு வேறு….

* கனவு என்பது ஆழ்மனதில் இருந்து வருபவை.

* அதிகாலையில் கண்ட கனவு பலிக்கும் என்றும்,ஒரு சிலருக்கு பலித்ததாகவும் கூறப்படுகிறது.

* அது எப்படி கனவில் வந்தது அப்படியே பலிக்கும்?.கனவு வேறு,நிஜம் வேறு அல்லவா?

* அது மட்டுமல்ல,நாம் இதுவரை செல்லாத புது இடத்திற்கு செல்கிறோம். ஆனால் அந்த இடம்,பல நாட்களுக்கு முன்பு கனவில் வந்த இடமாக இருக்கும். நிறைய பேருக்கு இது நடக்கும்.

* நாம் வாழ்க்கையில் இதுவரை செல்லாத இடம்,எப்படி கனவில் வந்தது.அல்லது கனவில் வந்த இடத்திற்கு ஏன் செல்கிறோம்?

* கனவில்,நாகம் வந்தாலோ,இறந்தவர்கள் வந்தாலோ கெட்டது நடக்கும் என்பார்கள்.

* கனவு பலிக்கும் என்றால் எல்லா கனவுகளும் பலிக்க வேண்டுமே?.

ஓவியம்:-

* மொழிகள் தோன்றாத காலகட்டத்தில், மனிதனுக்கு தெரிந்த மொழி ஓவியங்கள் மட்டுமே.

* பழங்கால மனிதன் குகைகளில் ஓவியங்களை வரைந்து வைத்தான்.பின் வருபவர்களுக்கு தன் வரலாற்றை ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தினான்.

* அப்படிப்பட்ட ஓவியங்களில் சில மர்மங்கள் உள்ளன.

* புகழ் பெற்ற ஓவியர் ‘லியானார்டோ டாவின்சி’ வரைந்த ‘மோனலிசா’ ஓவியம் பல மர்மங்களை ஒழித்து வைத்துள்ளது.

* அறையின் எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் நம்மையே பார்ப்பது போல் தெரியும் இந்த ஓவியத்தை யாரை முன்மாதிரியாக வைத்து வரைந்தார் என்று புரியாத புதிராக உள்ளது.

* ஒரு சிலர்,அவரையே முன்மாதிரியாக வைத்து வரைந்தார் என்றும் கூறுகின்றனர். இன்னும் சிலர்,ஒரு வேற்றுகிரக வாசியை மையமாக வைத்து வரைந்தார் என்றும் கூறுகின்றனர்.

* மேலும் அந்த ஓவியத்தின் கண்ணில் LV,CE என்ற எழுத்துக்கள் உள்ளன.LV என்பது லியானார்டோ டாவின்சியின் கையெழுத்தாக இருக்கலாம்.ஆனால் CE என்பது என்னவென்று தெரியவில்லை.72 என்ற எண்ணும் வரைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.அதற்கான விளக்கம் இன்னும் புரியவில்லை.

தி லாஸ்ட் ஸப்பர்:-

* லியானார்டோ டாவின்சியின் இன்னொரு புகழ் பெற்ற ஓவியம் ‘தி லாஸ்ட் ஸப்பர்’.இயேசு தனது சீடர்களுடன் கடைசியாக விருந்து உண்ணும் ஓவியம்.

* இந்த ஓவியம் உலக அழிவை குறிப்பிடுவாக கூறப்படுகிறது.

* இயேசுவின் வலதுபுறம் உள்ள ஓவியம் பெண் என்றும்,ஒரு சிலர் ஆண் என்றும் கூறுகின்றனர். இயேசுவின் பிம்பம் என்றும் கூறுகின்றனர்.

* அந்த ஓவியத்தில் ஒரு சீடர்,கையில் கத்தியும்,மற்றொருவர் பொற்காசுகளையும்,உப்பை தட்டிவிட்டது போன்றும் இருக்கும்.ஆனால் இதற்கான விளக்கம் இன்னும் கண்டறியப இயலாமலே உள்ளது.

மடோனா வித் சைல்ட் குவானா:-

* இந்த ஓவியம் கி.பி.1500 களில் வரையப்பட்டது.இது குழந்தை ஏசுவுக்காக மேரி மாதா பிரார்த்தனை செய்வது போல் இருக்கும்.

* அந்த ஓவியத்தை உற்று நோக்கும்போது,பறக்கும் தட்டு போன்ற ஓவியமும்,அதற்கு கீழ் ஒருவர் அதை பார்ப்பது போலவும் இருக்கும்.

* 1903 ம் ஆண்டுதான்,ரைட் சகோதரர்கள் முதல் விமானத்தை கண்டுபிடித்தனர்.அப்படி இருக்க,500 வருடங்களுக்கு முன்பு எப்படி பறக்கின்ற பொருளை உருவாக்கினர்?

* அந்த பறக்கும் தட்டானது,வேற்று கிரக வாசிகளுடையது என்றும்,குழந்தை ஏசுவை பூமியில் கொண்டு வந்து விட்டதாகவும் செவி வழி கதையும் உண்டு.

* ஆக,வேற்றுகிரக வாசிகள் இருப்பது குறித்து 500 வருடங்களுக்கு முன்பு அந்த ஓவியத்தில் வரையப்பட்டுள்ளதா?

* 500 வருடங்கள் இகியும் இதற்கு இன்னும் பதில் தெரியவில்லை.

பிரமிடுகள்:-

* உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிடுகள்,4000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டவை.

* பண்டைய எகிப்தில் இறந்தவர்களை பிரமிடுகளில் தான் புதைத்தனர்.

* ஆனால் இந்த பிரமிடுகள்,மனிதனால் கட்டப்படவில்லை வேற்றுகிரக வாசிகளால்தான் கட்டப்பட்டவை என்று கூறப்படுகிறது.

* ஏனெனில், பிரமிடானது 1 லட்சம் கற்களாலும்,ஒன்றரை லட்சம் டன் சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டது என்றும் மதிப்பிட்டுள்ளனர்.எந்தவித தொழில்நுட்பமும் இல்லாமல்,எவ்வாறு இவ்வளவு நேர்த்தியாக கட்டப்பட்டது?.அதனால்,வேற்றுகிரக வாசிகளால் தான் கட்டப்பட்டிருக்கக் கூடும் என்கின்றனர்.

* மேலும் இந்த பிரமிடுகளுக்குள் ரகசிய அறைகள் கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

* இந்த ரகசிய அறைகள் எதற்காக கட்டப்பட்டன என்று இன்று வரையிலும் மர்மமாகவே உள்ளது.

* ஏராளமான தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்து விட்ட இந்த நூற்றாண்டிலும், இன்னும் பல மர்மங்களுக்கு விடை தெரியாமலயே உள்ளது.’கற்றது கையளவு,கல்லாதது உலகளவு’ என்று ஔவைப் பிராட்டி கூறியதைப் போல்,உலகில் நாம் கண்டுபிடித்தது வெறும் 5 சதவீதம்தான்.

* நாம் சாதாரண மனிதர்கள்தான். இயற்கை சக்திகள் மனித சக்திக்கு அப்பாற்பட்டவை. ஏன்……! நம் கற்பனை சக்திக்கும் அப்பாற்பட்டவை. அவற்றிற்கான பதிலைத் தேடினால் தேடினால்,தேடல்கள் முடியாது…….

—கங்காதரன்.

Tiruppur media works

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here