மர்மம்-3

Tiruppur Media Works

6 *ஜோதிடம்:-

     * நாம் அடுத்து பார்க்க இருப்பது ‘ஜோதிடம்’.

    * ஜோதிடத்தில் பாதி உண்மை,பாதி பொய் என்பார்கள்.

    * ஒரு ஜோசியக்காரரிடம் பார்த்து நம்பிக்கை இல்லாவிட்டால் அடுத்த ஜோசியரைப் பார்ப்பார்கள்.அவர் வேறு ஒன்றைக் கூறுவார்.இப்படியிருக்க,ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இழந்து விடுகின்றனர்.

     * “ஜோதிடம் மனிதன் தோன்றும் முன்பே உருவானது” என்று சிலர் கூறுவர்.

    * “இந்தக் காலத்துல போயி ஜோசியத்தையெல்லாம் நம்பலாமா?” என்றும் சிலர் கூறுவர்.

    * ஒருவரின் ஜாதகம்,ராசி,நட்சத்திரம் இவற்றை வைத்து அவரின் எதிர்காலத்தைக் கணித்து விடுகின்றனர். ஆனால் ஜோசியர் சொன்னது போல் எல்லாருக்கும் எதிர்காலம் அமைவதில்லை.

    * ஜோதிடம்,ஜாதகம் என்பது மனிதனுக்கு மட்டும் தானா?விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இல்லையா?

    * ஜோதிடத்தின் மீது இன்னும் பலருக்கு நம்பிக்கை இல்லை என்பதுதான் உண்மை….

    * ஆனால் பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள்,இத்தனை வருடங்களுக்குப் பிறகு, இந்த இடத்தில் இந்த சம்பவம் நடக்கும்,இத்தனையாவது நாளில் மழை பெய்யும்,சூரிய சந்திர கிரகணங்கள் வரும் என்று சரியாக கணித்துக் கூறும் வல்லமை பெற்றிருந்தனர்.ஆனால் அது போன்று இப்போது உள்ளவர்களால் ஏன் கணிக்க முடியவில்லை.

    * ஆக,ஜோதிடம் பழங்காலத்தில் இருந்தது,இப்போது இல்லை என்று அர்த்தமா?….

    * ஜோதிடத்தைப் பற்றிய உண்மையும் முழுமையாக அறியப்படவில்லை என்பதே உண்மை….

7 *விதி:-

    * எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் விதியைத் தான் சொல்கிறோம்.

    * ‘விதி’ என்பது கடவுளை மிஞ்சிய சக்தியா?அல்லது மனிதனை ஆள கடவுள் கையாளும் யுக்தியா?

    * இந்த விதி உண்மையா?இல்லையா?

    * ‘விதியை மதியால் வெல்லலாம்’ என்பார்கள்.ஆனால் அது எப்படி வெல்ல முடியும்?’விதி’ என்றால் நாளை நடக்கவிருக்கும் செயல்தான் என்றுதான் பொருள்படும். அடுத்து என்ன நடக்கும் என்பதே மனிதர்களான நமக்குத் தெரியாதே!

    * 
நாள்தோறும் நடப்பவை நடந்து கொண்டேதான் இருக்கின்றன.மனிதன் அவன் வேலைகளைச் செய்து கொண்டுதான் இருக்கின்றான். ஒரு சிறு தவறு நடந்தால் கூட விதியைத் தான் கூறுகிறோம்.

    * “பரிஷத் மகாராஜாவுக்கு ஒரு நாகத்தால்தான் மரணம் வரும் என்று ஜோசியர் கூறியதால் நடுக்கடலுக்குச் சென்றும்,ஒரு சிறு பாம்பினால் அவருக்கு மரணம் வந்துவிட்டது” என்ற ஒரு கதை உண்டு.

    * இது ‘விதி’ நம்மை எங்கு சென்றாலும் விடாது,என்பதற்கு உதாரணமாக கூறப்படும் கதை.

    * ஒரு வேளை,விதி என்பது உண்மையில் இருக்கின்றதா?இல்லை நாம் தான் அதை நம்பி வாழ்கின்றோமா….?

    * இதுவும் ஒரு ‘புரியாத புதிராகவே’ உள்ளது.

 
 

Tiruppur Media Works

9 *வானம்:-

* நாம் தினமும் பார்க்கக் கூடியவைகளில் வானமும் ஒன்று.

* சாதாரணமாக பார்க்கும் போது வெறும் நீல நிறமாகத் தெரியும்.
ஆனால்,அதில் தான் பால்வெளி அண்டம்,லட்சக்கணக்கான நட்சத்திரங்கள்,ஆயிரக்கணக்கான கோள்கள்,சூரியன்,நிலா போன்றவைகள் உள்ளன.

* ஆனால்,வானத்திற்கு எல்லை உண்டா?வானம் எப்படி உருவானது?எப்போது உருவானது?இதையெல்லாம் கேட்டால்,பதில் சொல்வது கடினம்தான்.

* பூமியைப் போல் பல கோள்களை கண்டறிந்ததாகவும்,அதில் சில கோள்களில் உயிர்கள் வாழ்வதாகவும் அவ்வப்போது வானில் வல்லுநர்கள் கூறிக்கொண்டுதான் இருக்கின்றனர்.செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழலாம்,இதற்கு முன் உயிர்கள் வாழ்ந்ததாகவும் கூறுகின்றனர்.

* ஆனால் இது முற்றிலும் உண்மையா என்பதில் ஐயமே!ஏனென்றால்,புவியைத் தவிர எந்த ஒரு கிரகத்திலும் வளிமண்டலம் இல்லை என்று வானியல் அறிஞர்கள் கூறியிருந்தனர்.

* செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் தொழில்நுட்பத்தால்,நட்சத்திரத்திற்கு அனுப்ப முடியவில்லை.நட்சத்திரங்களின் தொலைவையும் அளக்க இயலவில்லை.

* ‘ஏலியன்ஸ்’ எனப்படும் வேற்றுகிரக வாசிகள் வசிப்பதாகவும் சொல்கின்றனர். அவர்கள்,பூமிக்கு அடிக்கடி வருவதாகவும் கூறுகின்றனர்.சமீபத்தில் காணாமல் போன மலேசிய விமானத்தையும் அவர்கள்தான் கடத்தியிருக்கலாம் என்றும் கூறினர்.

* ஏலியன்ஸ் சீக்கிரம் புவியை ஆள்வார்கள் என்றும் கூறுகின்றனர்.ஆனால் இது உண்மையா….?

* லட்சக்கணக்கான ரகசிங்களை பூமி மறைத்துள்ளது போலவே வானமும் மறைத்து வைத்துள்ளது.

 
மர்மங்கள் தொடரும்….
                                  — கங்காதரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here