விடை தீர்க்கப்படாத மர்மங்கள்!!!!!

அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றிலும் பல நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.அவற்றில் நாம் அறிந்திடாத பல செயல்களும் நடக்கின்றன.இதனை மர்மம் என்று கூறுகிறோம்.இவ்வுலகில் விடை தீர்க்கப்படாத மர்மங்கள் நிறைய இருக்கின்றன.அவற்றிற்கு விடை தேடிக் கொண்டுதான் இருக்கின்றோம்.மர்மங்களுக்கு விடை தேடுவதில்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக நகர்கிறது.அவற்றில்…..

By Tiruppur Media Works

1.முதல் மர்மம் ‘பேய்’:-

* மனிதன் தோன்றி இந்நாள் வரையிலும் விடை பெறாத மர்மங்களில் இதுவும் ஒன்று.

* “அறண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்று சொல்பவர்களுக்கு கூட இரவில் தனியாக செல்ல பயம் தான்.ஏனென்றால்,இரவு என்றால் பயம் தானாக வந்து விடும்.

* ‘பேய்’ இதன் மேல் நம்மில் சிலருக்கு நம்பிக்கை இருக்கும்,சிலருக்கு நம்பிக்கை இருக்காது.
இன்னும் சிலர் “நல்லது என்று ஒன்று இருந்தால்,கெட்டதும் இருக்கும்” என்போம்.”நான் பேயை நேரில் பார்த்திருக்கிறேன்” என்று சொல்பவரும் உண்டு.

* கிராமங்களில் ‘கொல்லிவாய் பிசாசு’,’இரத்தக் காட்டேரி’என்று அக்காலத்தில் வாழ்ந்த பெரியோர்கள் கூறி இருந்தனர்.

* 4500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ‘ஹரப்பா நாகரிகத்தினர்’ பேய்,பிசாசு இவற்றிற்கு பயந்து  தாயத்துக்களை கட்டிக்கொண்டனர்.

* ஆக,இவற்றைப் பற்றி இன்று நேற்றல்ல,4500 வருடங்களுக்கு முன்பு இருந்தே பயம் இருந்து வருகிறது.

* எப்படி இருப்பினும், அமானுஷ்ய விஷயங்கள் பற்றிய மர்மம் இன்னும் விலகவில்லை.

Tiruppur Media Works 

2.இரண்டாவது ‘கடவுள்’:-

* கடவுள் மேல பாரத்தை போட்டு செய்வோம்” என்று கூறுவோம்.

* ஆனால்,கடவுள் என்ற ஒரு சக்தி இருக்கிறதா? என்று யாருக்கும் தெரியாது.

* “நான் பேயை நேரில் பார்த்திருக்கிறேன்” என்று சொல்பவர்கள் கூட உண்டு.ஆனால் “கடவுளைப் பார்த்திருக்கிறேன்” என்று கூறியவர்கள் இல்லை.

* கடவுள் சக்தி முற்காலத்தில் இருந்ததாகவும்,இந்தக் காலத்தில் மறைந்து விட்டதாகவும் கூறுவர்.

* பல புராணங்களும்,இதிகாசங்களும் கடவுளைப் பற்றி கூறியிருக்கின்றன.

* ஆனால்,கடவுளைப் பற்றிய உண்மைகள் இன்னும் அறியப்படவில்லை.

3.மரணம்:-

* ‘மரணம்’ என்பது உடலை விட்டு உயிர் பிரிந்து செல்வது.

* ஆனால்,மரணத்திற்குப் பின்னர் என்ன நடக்கும்? என்று யாருக்கும் தெரியாது.

* உடலை விட்டு உயிர் சென்றவுடன்,எங்கே செல்லும்?ஆன்மா(உயிர்)வுக்கு அழிவு உள்ளதா,இல்லையா?என்று தெரியாது.

* இறந்தவர்கள்,சொர்க்கம் செல்வார்கள்,நரகம் செல்வார்கள்,என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் சொர்க்கம்,நரகம் இவை இரண்டும் எப்படி இருக்கும்?இதற்கு முன் இவை இரண்டிற்கும் யாராவது முன்பே சென்று வந்தார்களா?அப்படியே சென்றாலும்,திரும்பி வர முடியுமா?
பிறகு எப்படி நமக்கு தெரிய வந்தது?.

* பிறப்பதற்கு முன்பு எப்படி இருந்தோம் என்றும் தெரியாது, இறந்ததற்கு பின் எப்படி இருக்கும் என்றும் தெரியாது.

மர்மங்கள் தொடரும்……..
 
           —கங்காதரன்.

Spread the word

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here