விளக்கொளியில் படிக்கும் மாணவனை கேட்டேன்;

ஏன் தம்பி..? உங்கள் வீட்டில் மின் இணைப்பு இல்லையா? என்று. ;

அதற்கு அவன் சொன்ன பதில்,

‘என் அப்பா குடிக்க போனார்;

தடுத்த என் தாயை அடித்து முடமாக்கினார்;

குடிக்க இருந்த பணம்,

அவருக்கு மின் கட்டணம் கட்ட இல்லை;

அரசாங்கம் எங்கள் மின் இணைப்பை துண்டித்தது;

ஆனால் மதுக்கடையை மூடலில்லை;

அரசாங்கம் எங்கள் வீட்டில் ஃபீஸை பிடுங்கியது;

ஆஸ்பத்திரி எங்களின் காசை பிடுங்கியது;

ஆனால் என் தாய் உடல்நிலையில் முன்னேற்றமில்லை;

என்றாவது என் குடும்பத்திற்கு  விளக்கேற்றி வைக்க இந்த விளக்கொளியில் படிக்கிறேன்’ என்றான்.
          –கங்காதரன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here