காடு,பல்லாயிரக்கணக்கான வனவிலங்குகளின் வசிப்பிடம், 

மனிதர்களுக்கு அது பெரும் வரப்பிரசாதம்;

ஆதிமனிதன் காடுகளில் பிறந்தான், வளர்ந்தான், மடிந்தான்;

காடுகளை தாய்மடியென எண்ணி தவழ்ந்தான்;

ஆனால் இன்றைய மனிதன்,
காடுகளை அழித்து நாடுகளாக்கினான், வீடுகள் ஆக்கினான்;

மொத்தத்தில் காடுகளை
சுடுகாடாக்கினான்;

நாகரிகங்கள் வளர்ந்தன,
காடுகள் அழிந்தன;

வனவிலங்குகள் மனிதனின் வசிப்பிடத்திற்கு வந்தால் அடித்து துரத்துகிறான்;

மனிதன் வனவிலங்குகளின் வசிப்பிடத்திற்கு சென்றால் கடித்து தின்றாமல் என்ன செய்யும்?

ஆனால் அவற்றையும் வேட்டையாடி குவிக்கிறான்;

சிறு தீக்குச்சி முதல் பெரிய கட்டிடங்கள் வரை காடுகளிலிருந்து பெறுகிறான்;

காடுகள் இல்லையென்றால் வீடுகள் இல்லை எந்த நாடும் இல்லை. 
           -கங்காதரன்.

Tiruppur Media Works

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here