மார்கழி பனிநிலவோ இல்லை மாசியில் இளவெயிலோ;

மோகன புன்னகையோ இல்லை மந்திர சிரிப்பழகோ;

வானவில் தங்கையோ வான்தந்த கங்கையோ;

கவிபாடும் குயிலினமோ தோகை விரித்தாடும் மயிலினமோ;

சிங்கார சிட்டினமோ உன்மேனி ஒளிர்கின்ற ரத்தினமோ.
(மார்கழி பனிநிலவோ……)

1.இடையோ இல்லை கொடியோ என்று படைத்தான் ஒரு கவிஞன்;

புவியில் இந்த கவியை என்று படைத்தான் அந்த கலைஞன்?;

மாலை தோன்றும் நிலவைப் போல அழகோ உன் முகமோ;

சேலை மூடும் மலரைப் போல சிலையோ இல்லை கலையோ;

மழலை பேச்சும் வெள்ளை மனதும் சேர்ந்த சிறப்பே உந்தன் குணமோ;
(பெண்ணே நீ. …. மார்கழி)

2.போதை ஏற்றும் மதுவைப்போல சிரிப்போ உன் சிரிப்போ;

காதல் சொல்லும் அழகைக்காட்டும் பார்வை உன் பார்வை;

செவ்வாழை தோற்றம் கொண்ட குழல்தான் உன் காலோ;

மலரைப் போல வாசம் காட்டும் கருமேகம் உந்தன் கூந்தல்;

விண்மீன் உடலில் புள்ளி கொண்ட மான்தான் உன் இனமோ;
(பெண்ணே நீ. . . மார்கழி)

-ஜி.ஜி.தரன்.TiruppurFM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here