காற்றிலே  கலந்து  எங்கள் வீட்டிலே விளையடும் குழந்தையும்
நீதானே..!
அன்பாலே  அரவனைக்கும் அன்னையும் நீதானே..!
தவறுகள்  செய்யும்போது தட்டிக்கேட்டு  என்னை திருத்தும் தந்தையும் நீதானே..!
அறிவுரைகள்  கூறி வாழ்க்கையை நெறிபடுத்தும் ஆசிரியரும் நீதானே..!
என்  மனதோடு மனம் விட்டு பேசும் தோழனும் நீதானே..!
என்  உடல் நலம்  காக்க உதவி செய்யும் மருத்துவரும் நீதானே..!
என்னை  சிந்திக்க வைக்கும் கவிஞரும் நீதானே..!
பாசத்தோடு  பழகும் பண்பான பண்பலையும் நீதானே..!
என்றும்  பண்பலையின் பாசக்கார பையன் நான்தானே..!
என்  உடலிலும், உயிரிலும் உறவாடும் உயிர் மூச்சும் நீதானே..!
உனக்கு  மட்டும் எத்தனை பரிமானங்கள் உன்னை என்னி வியந்து போகிறேன்..!
செவியிலே  புகுந்து, இரத்ததிலே கலந்து மனதிலே மறைந்து 
என் இதயத்தை இருக்கமாக பிடித்துக் கொணடாய்..!
உன்  இசையின் படைப்பு என் இதயத்தின் துடிப்பு…
நல்ல  குடும்பம் பண்பலை ஒரு பல்கலை கழகம்.
                    –சீ்.தேவராஜன், ஊஞ்சக்காடு, சேலம். (Tiruppur FM)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here