என் நிழல் என்னைவிட்டு பிரிந்து சென்று விட்டதால்,என் உயரும் என்னை பிரிந்து செல்ல அடம்பிடிக்கிறது. ஆம் அவளே என் நிழல் போன்றவள்,என் உயிரினும் மேலானவள்.
கங்கை நீராக தாகம் தீர்ப்பாள் என நினைத்தேன்,
ஆனால் கானல் நீராக மாறி என்னையும் என் கண்ணையும் ஏமாற்றிவிட்டாள்.
அவள் அருகே இருக்கையில் இதயத்துடிப்பு 72 இல்லை 100 முறை துடிக்கும்.உதடுகள் துடிக்கும். ஆனால் நாணம் தடுக்கும். அவள் இல்லாத நேரம் இதயம் துடிக்க மறுக்கிறது.உதடுகள் அவளைப் பற்றியே பேசி புலம்பும்.என் இதய இல்லத்தில் அவள் வந்து தீபமேற்ற காத்திருப்பேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here