ராஜா, அசோக், கிருஷ்ணா, ரவி, ஆனந்த் இந்த ஐவரும் நண்பர்கள். கல்லூரியில் படிக்கிறார்கள். அன்று கல்லூரியின் கடைசி நாள். எல்லாரும் பிரிந்து சென்று விடுவோம் என்ற ஏக்கத்தில் இருக்கின்றனர்.

பின்.,

அசோக்:இப்போ பாருங்க…………….டேய், ரவி உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்டா.டேய் பொறம்போக்கு, முட்டாப்பயலே………

பின்.,

புரபோஷர்:யாருடா என்ன முட்டாப்பய னு சொன்னது?

அசோக்:அய்யோ சார்……உங்கள சொல்லல,என் ப்ரண்ட் ரவிய சொன்னேன் சார்.

ரவி: ஆமா சார் என்னத்தான் சொன்னான்.

புரபோஷர்:ச்சே……மொதல்ல போயி பேர மாத்தனும்.

கிருஷ்ணா:சூப்பர் டா மச்சான்……..

அசோக்: மூணு வருஷமா என் மனசுல இருந்த பாரம் கொறஞ்சிடுச்சி.. ரொம்ப தேங்க்ஸ்டா ரவி.

பின் எல்லாரும் சிரித்தனர்.பின் பிரிவு உபசார விழா நடந்தது. பிறகு கல்லூரி முடிந்து எல்லாரும் பிரிந்து விட்டனர்.

சில நாட்கள் கழிந்தது.,

கிருஷ்ணா ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். பில் வந்தது. ஆனால் அவனிடம் பணம் இல்லை.பின்.,

சர்வர்: என்ன பணம் இல்லையா? காலங்காத்தால வந்துட்டாங்க சாவுகராக்கிங்க. யோவ் இந்தாள முதலாளிகிட்ட கூட்டிட்டு போங்கயா.

கிருஷ்ணா: சார். . . . . . ப்ளீஸ் சத்தம் போடாதங்க. நான் இந்த ஹோட்டல்ல வேலை செஞ்சு கடன அடச்சிடுறேன்.

சர்வர்: எதா இருந்தாலும் முதலாளிகிட்ட பேசு.
(என்று கூட்டிக்கொண்டு சென்றனர்).
அங்கே.,

கிருஷ்ணா: டேய். . . .ரவி……!

ரவி:டேய். . . . கிருஷ்ணா எ‌த்தனை நாளாச்சு உன்ன பாத்து….. என்னடா ஆச்சு?
(பின் நடந்ததை கூறினர்.)
சர்வரை கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

ரவி:ரஸ்கல்…… இவன் என்னோட ப்ரண்ட்டா…. நீ வாடா என்று கிருஷ்ணாவை அழைத்துச்சென்றான்.

ரவி : என்னடா ஆச்சு?

கிருஷ்ணா : என்னென்னமோ நடந்து போச்சுடா. வெளிநாட்டுக்கு போகனும் னு ஒருத்தன நம்பி 3 லட்சம் ரூபாய் கட்டுனோம்.ஆனா அவன் ஏமாத்திட்டான்டா. உன்னோட ஓட்டல்ல ஏதாவது வேலை போட்டு கொடுடா.

ரவி: என்னடா நீ… நீ என்னோட ப்ரண்ட்டுடா.நீ என்னோட பார்ட்னர் டா.
(கிருஷ்ணா அழுதவாறு கையெடுத்து கும்பிட்டான்)

ரவி: என்னடா நீ……
என்று இருவரும் அழுதனர்.பின்.,

ரவி :எனக்கு படிப்பு வரல ஒண்ணும் வரலனு என் அப்பா நிலத்தை வித்து இந்த ஓட்டல் வச்சு கொடுத்தாரு. ஏதோ ஆண்டவன் புண்ணியத்துல நல்லா போகுது. ஆமா ராஜா,ஆனந்த்,அசோக் இவங்கள பாத்தியா?

கிருஷ்ணா :இல்லடா யாரு நம்பருமே இல்ல.

ரவி :சரி பரவாயில்லை. உன்னையாவது பார்க்க முடிஞ்சதே.
என்றான்.பின் அவன் வீட்டுக்கு சென்றனர்.

மறுநாள்.,
மகாபலிபுரத்தில் சூட்டிங் நடந்து கொண்டு இருந்தது.

டைரக்டர் :எங்கய்யா அந்த அசிஸ்டெண்ட் டைரக்டரு?
(அசிஸ்டென்ட் டைரக்டர் டீ கிளாஸ்களுடன் வந்து கொண்டிருந்தான்)
அப்போது ரவியும், கிருஷ்ணாவும் அங்கு வந்திருந்தனர்.

ரவி :டேய். . . . நம்ம ஆனந்த் மாதிரி இருக்கான்டா.

கிருஷ்ணா :எங்கடா?

ரவி :அங்க பாருடா..!
(பின் இருவரும் அங்கே சென்றனர்.)

ஆனந்த் :டேய். . . நீங்க எங்கடா இங்க?

ரவி :அத நாங்க கேட்கணும்.
“(டீ எங்கய்யா” என்று குரல் கேட்டது.)

ஆனந்த் :இருங்கடா டீ கொடுத்துட்டு வந்திடறேன்.
(டீயைக் கொடுத்துவிட்டு வந்தான்.)

கிருஷ்ணா :என்னடா இது கோலம்?

ஆனந்த் :அசிஸ்டெண்ட் டைரக்டரு. . . . படிச்சது இன்ஜினியரிங், ஆனா அத தவிர எல்லா வேலையும் பார்க்க வேண்டியிருக்கு.

ரவி :ஏன்….. வேற வேலைக்கு போகலாமே?

ஆனந்த் :இஞ்சினியர் தவிர எந்த வேலையும் பிடிக்கல.திடீர்னு சினிமா மேல ஆர்வம் வந்திடுச்சி. அதான் அசிஸ்டெண்டா சேர்ந்துட்டேன். ரெண்டு படம் அசிஸ்டெண்டா ஒர்க் பண்ணிட்டேன். அடுத்த படத்துக்கு வாய்ப்பு தரேன்னு சொல்லி இருக்காரு.

ரவி :சரி. . . எங்க தங்கி இருக்க?

ஆனந்த் :வளசரவாக்கத்திலடா.

ரவி :சரி, ஃப்ரீயா இருக்கும் போது இந்த அட்ரஸ்க்கு வா.
என்று முகவரியை எழுதி கொடுத்தான்.பின்,

ஆனந்த் :ஓகேடா கண்டிப்பா வரேன்.

ரவி :ஓகேடா, ஆல் தி பெஸ்ட் டா.

கிருஷ்ணா :ஆல் தி பெஸ்ட் டா

ஆனந்த் :ரொம்ப தேங்க்ஸ்டா…..

(பின் இருவரும் கிளம்பிச்சென்றனர்).
பிறகு ஒரு நாள்.,

ஓட்டலுக்கு அசோக் வந்திருந்தான்.ரவியைப் பார்த்து, ..

அசோக் :டேய். . . .ரவி நீ எப்படிடா இங்க?

ரவி :இது என்னோட ஹோட்டல் தான்டா.

அசோக் :ரொம்ப சந்தோஷம் டா. ….
(பின் கிருஷ்ணா வந்தான்.)

கிருஷ்ணா :எப்படி டா இருக்க?

அசோக் :நல்லா இருக்கேன்டா. . . . நீ?

கிருஷ்ணா :ம்…….

ரவி :எங்கடா வேல பாக்குற?

அசோக் :ஒரு கம்பெனில இன்ஜினியரா இருக்கேன்.

ரவி :சந்தோஷம் டா ஏதாவது சாப்பிடுடா…..

அசோக் :இல்லடா. . பரவாயில்ல.. இப்போதான் சாப்பிட்டேன்… நான் வந்தது வேற விஷயம்.

ரவி :என்ன விஷயம்?

அசோக் :இந்த இடத்துல ஒரு பெரிய காம்ளக்ஸ் கட்ட எங்க எம்.டி. முடிவு பண்ணியிருக்காரு

ரவி :அதுக்கு?

அசோக் :இந்த ஓட்டல இடிச்சிட்டு……வேலய ஆரம்பிக்க சொன்னாரு. அதுக்காக பார்க்கச்சொன்னாரு.

ரவி :என்னடா சொல்ற?

அசோக் :சிட்டியிலயே டெவலப் ஏரியா இது. . . இங்க ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டுனா நல்லா ‘பிக்அப்’ ஆகும் னு சொன்னாங்க. எவ்வளவு பணம் வேணாலும் வாங்கிக்கோ.

ரவி :தப்பா நினைக்காத அசோக், இது எங்க அப்பா எனக்காக வச்சு கொடுத்த ஹோட்டல்.இத அடுத்தவங்களுக்கு கொடுத்தாலே மனசு தாங்காது.நீ இடிக்கணும் னு சொல்றியே!

அசோக் :இல்லடா ரவி…..உனக்கு பணம் எவ்வளவு வேணாலும்………

ரவி :வேணாம். …..எனக்கு பணம் வேணாம். . எனக்கு என்னோட ஹோட்டல் தான் வேணும்.

அசோக் :மன்னிச்சிடுடா….. நாங்க ஒண்ணு முடிவு பண்ணா அத நடத்தி காட்டிடுவோம். இன்னும் ரெண்டு நாள் டைம் தர்றேன் அதுக்குள்ள ஒரு நல்ல முடிவா சொல்லு.
(என்று கிளம்பினான்)

ரவி :ஒரு நிமிஷம்….. நீ என்னை பார்க்க வந்தது என்மேல வச்சிருந்த பாசத்துனால னு நெனச்சேன். ஆனா இப்படி பணத்தாச பிடிச்ச புது அசோக்கா வந்திருப்பேனு தெரியாது. என் உயிரே போனாலும் என் ஹோட்டல விட்டுத்தர மாட்டேன்.நீ போகலாம்.
(அசோக் கிளம்பிச்சென்றான்)

கிருஷ்ணா :ஏன்டா அவன்தான் எவ்வளவு பணம் வேணாலும் தரேன்னு சொல்றான்ல அப்புறம் என்ன?

ரவி :ஏன்டா நீ பசியோட வந்தப்போ உன் பசிய தீர்த்த இடம் இதானே? இது கோவில விட புனிதமானதுடா. அத இடிக்கச்சொல்றான்.இடிக்கலாமா?

கிருஷ்ணா :பணத்தை வச்சு வேற இடத்துல ஹோட்டல வைக்கலாமே.

ரவி:இத விட்டா வேற இடம் எங்க இருக்கு?அதான் அசோக் கேட்டு வந்திருக்கான்.

கிருஷ்ணா :ஸாரிடா மச்சான். . . . நா அவசரப்பட்டுட்டேன்.

ரவி: பரவாயில்லடா….

ரெண்டு நாள் கழித்து.,
ஹோட்டலை இடிக்க ஜே.சி.பி இயந்திரம் வந்தது.

ரவி :யோவ்….. என்னயா பண்ணப்போறீங்க?

அசோக்: இடிக்கப்போறாங்க.

ரவி :வேணாம் அசோக் இடிக்க வேண்டாம் னு சொல்லு….

ஆனால் ஜே.சி.பி இயந்திரம் ஹோட்டலை இடித்தது.ரவியின் கண்முன்னே ஹோட்டலை இடித்தனர்.அதனை ரவியினால் தாங்க முடியவில்லை.

அசோக் :முதலயே ஒத்துழைப்பு கொடுத்து இருந்தா பணமாவது மிஞ்சியிருக்கும். ஸாரி மை ப்ரண்ட்.
(என்று போய்விட்டான்).

சில நாட்கள் கழித்து.,
ராஜா,ரவி,கிருஷ்ணா ஆகியோர் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அங்கு ஒருவன் சாப்பிட வந்தான். ஆனால் அவனிடம் பணம் இல்லை. அவன் வேறு யாரும் இல்லை. அசோக் தான். சாப்பிட பணம் இல்லை என்று சர்வர் அசோக்கை திட்டினார்.பின் மூவரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின் அசோக்கிடம் என்னவாயிற்று என்று கேட்டனர்.

‘அசோக் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல்தான் இங்கே வந்ததாகவும் கூறினான்’.

ரவி :இவனோட ஹோட்டல இடிச்சிட்டோமே மறுபடியும் எப்படி ஹோட்டல் வச்சேன்னு பாக்குறயா?
எல்லாம் நம்ம ராஜா செஞ்ச உதவிதான்டா….

(பின் ராஜாவைச் சந்தித்தது பற்றியும் , ராஜாவின் சொந்த நிலத்தை விற்று தனக்கு உதவியதாகவும் இது ரவியின் ஹோட்டல்தான் என்றும் கூறினான்.)

ராஜா :அசோக். . . . பணம் முக்கியம்தான் ஆனா அதவிட ப்ரண்ட்சிப் ரொம்ப முக்கியம்.

ஆனந்த்: ஸ்மைல் ப்ளீஸ். . . . . .

ரவி :டேய். . . ஆனந்த். . . . .

ஆனந்த் :டைரக்டர் சான்ஸ் கெடச்சிடுச்சில்ல..

ராஜா :கதை…?

ஆனந்த் : நம்ம கதைதான்……நம்ம கதைய அப்டியே தயாரிப்பாளர் கிட்ட சொன்னேன். ஓகே சொல்லிட்டாரு….. அடுத்த வாரம் ஷீட்டிங்…

ஸ்மைல் ப்ளீஸ். ……

பின் அனைவரும் ஒற்றுமையாக இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here