தென்றல் வீசும் வேளை;
அது திங்கள் பேசும் மாலை;
புள்ளினம் பாடும் கானம்;
புள்ளி வைக்குமே வானம்;
வட்ட நிலா பார்த்து வட்டமாய் அமர்ந்து;
வெட்ட வெளியில்
நடக்கும் ஒரு விருந்து;
கவலை மறந்த வயது;
கடவுளும் வாழும் மனது;
சட்டென ஓடியது காலம்;
சிறை பட்டதென ஆகியது வருங்காலம்;
படிப்பில் நாட்டமும்;
விடுப்பில் ஆட்டமும்;
விளையாட ஓட்டமும்;
என இருந்தது அந்தக்காலம்’
முகநூலில் மூழ்கி;
தொலைக்காட்சியில் தொலைந்து;
வலைத்தளங்களில் சிக்கி வாழ்கிறோம்.
‘இது இந்தக்காலம்’.
சுகமாக அமைந்ததொரு தருணம்;
வரமாக கிடைக்குமா மீண்டும் அந்தப்பருவம்?
-கங்காதரன்
I every time emailed this website post page to all my friends,
for the reason that if like to read it then my links will
too.